சென்னை: சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப் வாரியத்தின் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்.
பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை: 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா தொலைபேசி எண். 1916ல் தெரிவிக்கலாம். மேலும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.