Saturday, March 2, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

by Lavanya

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது , “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்று, அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி நாளை 02.12.2023 அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் 2000 இடங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

twenty − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi