சென்னை: சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என குடிநீர் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை 044-45674567ல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.