சென்னை: குரங்கு கடியால் குரங்குபோல தாவிய நபர் என்று பரவும் தகவல் வதந்தி என உண்மை தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. “சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர், திடீரென குரங்குபோல தாவியதாக காணொலி பரவுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல், அவரை குரங்கு கடிக்கவில்லை. காணொளியில் இடம்பெற்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர். ஒத்துழைப்பு தராமல் முரண்டு பிடித்ததாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விளக்கம்” என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.