சென்னை: குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. குரங்கம்மை நோய் பாதித்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.