சென்னை: பணமோசடி வழக்கில் அதிமுக மாவட்டச் செயலாளரின் சகோதரர் நல்லதம்பிக்கு சென்னையில் ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. நல்லதம்பியை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அபிராமபுரம் போலீசுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.