டெல்லி : மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல்ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.பாலியல்ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மலையாள திரையுலகில் பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை மலையாள திரையுலகினர் ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்துவதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.