புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாக். மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் நடவடிக்கை எடுத்தது. இந்த தாக்குதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உலக நாடுகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக்கட்சி குழுக்கள் சென்றனர்.
7 குழுக்களில் இடம் பெற்று இருந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் 33 நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினர். இந்த குழுவில் இடம் பெற்று இருந்த உறுப்பினர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார்.