கோவை: கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் டெல்லி சென்றதை வரவேற்கிறோம். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மக்கள் மீது அதீத பற்று கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.12 லட்சம் கோடி செலவிட்டு இருக்கிறார்.
உண்மையாகவே தமிழ் கலாச்சாரத்திற்கு அதிக பெருமை சேர்ப்பது மோடி அரசாங்கம்தான். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனக் கூறிய ஒரே பிரதமர் மோடிதான். நாங்கள் யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆப்ரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியனுக்கும், ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.