Wednesday, February 21, 2024
Home » தற்போது 73 வயதாகிறது என்பதால் மோடிக்கு பிறகு பிரதமர் பதவிக்கு அடுத்து யார்?: கருத்துக்கணிப்பில் புது தகவல்

தற்போது 73 வயதாகிறது என்பதால் மோடிக்கு பிறகு பிரதமர் பதவிக்கு அடுத்து யார்?: கருத்துக்கணிப்பில் புது தகவல்

by Suresh

புதுடெல்லி: மோடிக்கு பிறகு அடுத்த பிரதமர் பதவிக்கு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது 2024 லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா டூடேயின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற கருத்துக் கணிப்பில், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், மோடிக்குப் பிறகு மக்கள் யாரை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள்? என்பது குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

அந்த கருத்துக்கணிப்பின்படி, பிரதமர் மோடிக்குப் பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் 29 சதவீதம் பேரும் என 25 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்குப் பிறகு ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு 16 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என்று அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தற்போது 73 வயதாகிறது. பாஜக கட்சியின் சட்ட விதிகளின்படி 75 வயதுக்கு மேல் கட்சிப் பதவிகளிலோ, அரசுப் பதவியோ வகிக்க முடியாது. அதனால் மோடிக்கு பிறகு யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

fourteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi