சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்தநாள். தமிழ் தன் தாய்மொழியாக இல்லையே, தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்று பலமுறை வருத்தம் தெரிவித்தவர். உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறி மகிழ்ந்தவர். பிரதமர் மோடி நல்லாட்சியில் தமிழகம் 9 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் 7,89,605 வீடுகள், நகர்ப்புறத்தில் 7,05,710 வீடுகள் கட்டி தந்துள்ளார். பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறது.தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாஜ சார்பிலும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.