பாட்னா: பீகாரில் பிரதமர் மோடியின் பேரணிகளுக்கு இதுவரை ரூ.20,000 கோடி செலவிடப்பட்டுள்ளது என தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நேற்று சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், பீகாரில் பிரதமர் மோடியின் பேரணி ஒவ்வொன்றுக்கும் ரூ.100 கோடி செலவாகியுள்ளது. கடந்த 2014ல் அவர் பதவிக்க வந்ததில் இருந்து 200 முறை பீகாருக்கு வந்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் 3 மக்களவை தேர்தல்கள்,2 பேரவை தேர்தல்கள் நடந்துள்ளன. இதனால் மொத்தம் ரூ.20,000 கோடி செலவிடப்பட்டுள்ளது’ என்றார்.
பீகாரில் மோடி பேரணிகளுக்கு இதுவரை ரூ.20,000 கோடி செலவு: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
0
previous post