புதுடெல்லி: பிரதமர் பதவியில் மோடி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை பா.ஜ பாராட்டி உள்ளது. நாட்டின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி மோடி பதவி ஏற்றார். கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது ஆட்சி அமைந்துள்ள இந்த நேரத்தில், பிரதமர் பதவியில் மோடி நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதை பா.ஜ பாராட்டி உள்ளது. இந்தியாவின் பிரதமராக 11 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது எக்ஸ் பதிவில் எழுதினார். இதே போல் மூத்த பா.ஜ தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பிரதமராக 11 ஆண்டுகள் நிறைவு செய்தார் மோடி
0