நவீன விவசாய தொழில்நுட்பத்தில் சீனா முன்னோடியாக விளங்குகிறது. பாலைவன நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சீனா அசத்தி வருகிறது. சீனாவின் தொழில்நுட்பத்தை கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் நாடி வருகின்றன. பாலைவனத்தை விளைநிலங்களாக மாற்ற சீனா “செல்லுலோஸ்’ என்ற பசையை பயன்படுத்துகிறது. 2013ல் சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். 2016ல் பயன்படுத்தி மங்கோலியா பாலைவனத்தில் சீனா விவசாயம் செய்தது. செல்லுலோஸ் பசையை பாலைவன மணலோடு கலக்க வேண்டும். பாலைவன மணல் நீர் ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக் கொள்ளும். புதிதாக விளைநிலங்களாக மாற்றப்பட்ட நிலங்களில் வளரும் தாவரங்களுக்கு கூடுதல் நீர் தேவையில்லை. வடக்கு சீனாவில் 5%ஆக இருந்த விவசாய நிலம் 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.















