Tuesday, February 27, 2024
Home » மாதிரி ஆளுமை தேர்வு முடிவுகள்

மாதிரி ஆளுமை தேர்வு முடிவுகள்

by Karthik Yash

சென்னை: அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாதிரி ஆளுமைத் தேர்வு மற்றும் வனப் பணி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குடிமைப்பணிகள் முதன்மைத் தேர்வின் இறுதி முடிவில், இப்பயிற்சி மையத்தில் தங்கி பயின்ற 37 தேர்வர்களும், வனப்பணி முதன்மைத் தேர்வு முடிவுகளில், இப்பயிற்சி மையத்தில் தங்கி பயின்ற 16 தேர்வர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் டெல்லியில் ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளனர். கடந்த 4, 5ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வில், 54 குடிமைப்பணி தேர்வர்கள் கலந்துகொண்டனர். ஆளுமைத் தேர்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு தேர்வர்களுக்கும் டெல்லி சென்று வருவதற்கு போக்குவரத்து செலவினமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

14 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi