சென்னை: திமுக ஆதி திராவிடர் நலக்குழுவின் மாநில செயலாளரும், பூந்தமல்லி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி – மாலதி கிருஷ்ணசாமி ஆகியோரின் மகள் டாக்டர் ஏ.கே.எஸ்.தாரணி, தமிழ்நாடு அரசின் வாழ்வாதார இயக்க உதவி செயற்பொறியாளர் சு.ப.முருகன் – மஞ்சுளா முருகன் ஆகியோரின் மகன் டாக்டர் எம்.பரத் கௌசிக் ஆகியோரது திருமணம் நாளை புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திருவான்மியூர், ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான மாதவரம் எஸ்.சுதர்சனம் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி எஸ்.சந்திரன், முன்னாள் எம்எல்ஏ இ.ஏ.பி.சிவாஜி, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் வரவேற்கின்றனர். முடிவில் ஆ.வில்வமணி நன்றி கூறுகிறார். முன்னதாக திருமண வரவேற்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.