திருப்போரூர்: திருப்போரூர் அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கேளம்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லிக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி அனைவரையும் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி திருப்போரூர், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், மாம்பாக்கம் வீராசாமி, நெல்லிக்குப்பம் பார்த்தசாரதி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் காயத்ரி அன்புச்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திவ்யா வினோத் கண்ணன், அருண்குமார், வெண்ணிலா நந்தகுமார், திமுக நிர்வாகிகள் அன்புச்செழியன், எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கெஜராஜன், ராஜவேலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 4 பள்ளிகளிலும் 565 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.