ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ ரபீக் கான் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது உள்ளே நுழைந்த முன்னாள் சிஆர்பிஎப் அதிகாரி விகாஸ் ஜாக்கர் எம்எல்ஏ மீது முரட்டு தனமாக தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எம்எல்ஏ கான் தனது மனைவியை தாக்கியதாக விகாஸ் ஜாக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.