சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர முன்னணி முதலீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ரூ.1,478.34 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ரூ.328.06 கோடி நிதி பங்களிப்பு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.1.478.34 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புர முன்னணி முதலீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு அளித்துள்ளார்