சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது. காலம் கடந்து செய்தாலும்,கண்துடைப்புக்கு செய்தாலும், பிரச்சனையை திசை திருப்ப செய்தாலும் மசோதாவை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.