புவனேஸ்வர்: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து போராட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை நவீன் பட்நாயக் ஏற்றார். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநிலங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் 7 மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட முயற்சி செய்து வருகிறார். 7 மாநிலங்களுக்கும் அமைச்சர், எம்.பி.க்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தயாநிதிமாறன், டி.ஆர்.பி.ராஜா சந்தித்து பேசினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் நவீன் பட்நாயக்
0