அஸ்வால்: தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக மிசோராம் பாஜ சட்டமன்ற உறுப்பினர் புத்த தன் சக்மா கூறியுள்ளார். மருத்துவம் பயின்ற புத்த தன் சக்மா மிசோராமில் முதல்வர் லால் தன்ஹால்லா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மீன்வளம் மற்றும் பட்டு வளர்ப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2018ம் ஆண்டு தேர்தலுக்கு பின் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார்.
இவர் தற்போது துய்ச்சங் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தனது சட்டமன்ற பதவிக்காலம் முடிந்த பிறகு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். 40 உறுப்பினர்களை கொண்ட மிசோராம் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.