புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வரும் நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதனையொட்டி, அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், மிசோரம் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆன்ட்ரூ லால்ரெம்கிமா அய்சால் வடக்கு-III தொகுதியில் போட்டியிடுகிறார். இதுதவிர 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.