மிசோரம்: மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து 17 பேர் உயிரிழந்துள்ளனர். பைராபி மற்றும் சைராங்கை இணைக்கும் குருங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்து விபத்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கிமீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது , 40 தொழிலாளர்கள் இருந்ததாகவும் , மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் , இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் பலரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.