கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டில் உள்ள இலக்குகளை தகர்க்க நீண்ட தூர ஏவுகணைகளைப் உக்ரைன் பயன்படுத்த தொடங்கி உள்ளது. ரஷ்யா மீது நீண்ட தூர ஏவுகணைகள், டிரோன்களை ஏவி நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில், கருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டான் நீர் மூழ்கிக் கப்பல் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
எஸ்-400 விமான எதிர்ப்பு வான் பாதுகாப்பு அமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள மொரோசோவ்ஸ்க் விமான தளமும் தகர்க்கப்பட்டுள்ளது. ஷெபெகினோ நகரில் உக்ரைனின் டிரோன்கள் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், இதில் பெண் ஒருவர் பலியானதாகவும் ரஷ்ய ராணுவம் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.