தேவையானவை:
புதினா – 1 கப்,
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்,
இஞ்சிச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை – ½ மூடி,
ஆம்சூர் பொடி அல்லது ஜல் ஜீரா பொடி – 1 டீஸ்பூன்.
செய்முறை:
புதினா, சீரகப்பொடி, இஞ்சிச் சாறு, எலுமிச்சை அனைத்தையும் ேசர்த்து உடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, ஆம்சூர் பொடி அல்லது ஜல்ஜீரா பொடி (கடைகளில் கிடைக்கும்) சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ்கட்டிகள் சேர்த்து, சிறிது காராபூந்தியை மேல் தூவி பருகினால் சுவையாக இருக்கும்.