Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிறுபான்மையினர் நல திட்டங்கள் அமைச்சர் நாசர் ஆய்வு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, சிறுபான்மையினர் நலன் குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் ஆய்வு செய்தார். கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டம், கிராமப்புற சிறுபான்மை மாணவியர்களுக்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், சிறுபான்மையினர் பள்ளி, கல்லூரி விடுதிகள்,

விடுதிகளில் வழங்கப்படும் வசதிகள், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியதவி, சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்குவது, கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல், தொன்மையான தேவாலயங்கள் புனரமைத்தல், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம், வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குதல்,

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் பற்றிய விவரங்கள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் வக்பு நிறுவனங்களுக்கு பெரு மராமத்து மானியம் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் தமிழ்நாடு ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, சிறுபான்மையினருக்கான திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்திடுமாறு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் சித்திக், அரசு கூடுதல் செயலாளர் சுரேஷ் குமார், சிறுபான்மையினர் நல இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஆசியா மரியம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.