பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் ஆவூர் ஊராட்சி அரசுப் பள்ளியில், கல்வி சீர்வரிசை மற்றும் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் குமுதா தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெயகார்த்தி ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.
எஸ்எம்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில், பள்ளிக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு அதிக விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்கள் மற்றும் தேர்வுகளில் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முடிவில் ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிர்வாகம், ஆவூர் எஸ்எம்சி உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.