சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது என தீர்மானிக்க எச்.ராஜாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என செல்வப்பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பினார். சென்னை, மதுரையை சேர்ந்த தமாகா மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அவர்கள் காங்கிரசில் இணைந்தனர். இதில் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு மற்றும் மாநில நிர்வாகிகள் அசோகன், கீழானூர் ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது எனத் தீர்மானிக்க பாஜவை சேர்ந்த எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அதனை தீர்மானிக்க முடியும். இதனை கூறுவதற்கு எச்.ராஜா யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரக்கூடாது என சொல்ல எச்.ராஜாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? செல்வப்பெருந்தகை காட்டம்
98