Tuesday, March 5, 2024
Home » அமைச்சர் உதயநிதி மக்கள் மீதுள்ள அக்கறையில் பேசியதில் தவறில்லை: துரை வைகோ பேட்டி

அமைச்சர் உதயநிதி மக்கள் மீதுள்ள அக்கறையில் பேசியதில் தவறில்லை: துரை வைகோ பேட்டி

by Suresh

சிவகாசி: ‘அமைச்சர் உதயநிதி மக்கள் மீதுள்ள அக்கறையில் பேசியதில் தவறில்லை’ என துரை வைகோ தெரிவித்தார். தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மழைக்கு முன்னதாகவே வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு நிவாரண உதவி அளிக்காத நிலையில் வெள்ள சேத நிவாரண பணிகளுக்கு போதிய ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. ஒன்றிய அரசு இதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் நிதியாக ரூ.450 கோடி மட்டுமே தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இது வழக்கமான பேரிடர் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி. ஒன்றிய அரசு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஒன்றிய நிதியமைச்சர் வழங்க முடியாது என தெரிவித்திருப்பது அரசியல் விரோத போக்கையே காட்டுகிறது.

அமைச்சர் உதயநிதி தென்மாவட்டங்களில் தங்கி வெள்ள நிவாரண பணிகளை செய்து வருகிறார். சென்னையில் மிக் ஜாம் புயலால் சேதம் ஏற்பட்ட போதும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டார். ஒன்றிய அரசிடம் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்தபோது, மக்கள் மீதுள்ள அக்கறையில் அவர்களது அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று கூறியதில் தவறில்லை. மக்களின் வரிப்பணத்தை வழங்க வேண்டும் என்று தான் அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது அவர் மீண்டும் மரியாதைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமைச்சர் பொன்முடி சட்டப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து விடுதலை பெறுவார்.இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

seventeen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi