திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் காக்களூர் பைபாஸ் சாலையில் மாவட்ட அவைத் தலைவர் மா.இராஜி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், பி.டி.சி.செல்வராஜ், பிரபு கஜேந்திரன், சி.ஜெரால்டு, வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்திரி ஸ்ரீதர், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வஷரன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், எஸ்.சங்கர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்று பேசினார். இதில், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது; ‘’எல்லாருக்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகசெயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்ந்திடவும் மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்றத தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
‘’ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்கவேண்டும் என்ற முதல்வரின் ஆணையை நிறைவேற்றும் வகையில், மாவட்ட கழகம் சார்பில் பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாக சென்று அரசின் திட்டங்களையும் உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக்கூறி, வரும் ஜூன் 20ம் தேதி தொடங்கி 40 நாட்களில் அனைத்து உடன்பிறப்புகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள் சன்.பிரகாஷ், என்.இ.கே.மூர்த்தி, ப.ச.கமலேஷ்,சே.பிரேம் ஆனந்த், டி.தேசிங்கு, ஜி.ஆர்.திருமலை, தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, பொன்.விஜயன், பேபி சேகர், ஜி.நாராயண பிரசாத் கலந்து கொண்டனர்.