சென்னை: கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் தேவைப்படும் பட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் உள்ள குறைகள் அனைத்தும் பொங்கலுக்கு பிறகு சரி செய்யப்படும். பேருந்து நிலையத்தை பராமரிப்பதற்கு புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தான் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்பட உள்ளது
கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் தேவைப்படும் பட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
167