திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற அறிவிப்பின்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில் ஆகிய 10 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டமானது இன்று துவங்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து திருக்கோயில் பொது தரிசனப்பாதையில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை அமைச்சர் வழங்கினார்.