சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயவியல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கழுத்து, முதுகு தண்டு, பின் மண்டை வலி காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனைத்து பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.