சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து கால் மரத்துப்போவதாக செந்தில்பாலாஜி தெரிவித்த நிலையில் மீண்டும் ஆஞ்சியோ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன்14 இல் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜூன்22இல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் உள்ள செந்தில்பாலாஜி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.