Sunday, April 21, 2024
Home » அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி..!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி..!!

by Kalaivani Saravanan

சென்னை: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சராக செயல்பட்டு வருபவர் சாத்தூர் ராமச்சந்திரன். கே.கே.எஸ்.எஸ்.ஆர். என அனைவராலும் அறியப்படுகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு இருதய பிரச்சினை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளார். பரிசோதனைகளின் முடிவுக்கு ஏற்றார் போல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது விருதுநகர், தென்காசி மாவட்ட திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi