சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஏப்ரல் 5ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உள்பட 5 பேர் மீது பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.