சென்னை: லண்டனில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று கலைஞரின் சிறப்பு மலரை வெளியிட்டார்.லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள டிரினிட்டி சென்டர் வளாகத்தில், பிரிட்டன் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு கலைஞரின் சிறப்பு மலரை வெளிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.இந்த விழாவில் திமுக அயலக அணி அமைப்பாளர் செந்தில், மாநில சிறுபான்மையினர் அணி இணைச் செயலாளர் பூவை ஜெரால்டு, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சோ.விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.