விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 3 சாலைகளில் மட்டும் போக்குவரத்து தடை உள்ளது. நாளை பிற்பகலுக்குள் அது சரிசெய்யப்படும் என்று விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் கனமழை வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் 317 கி.மீ தூர சாலைகளும், கடலூர் மாவட்டத்தில் 80 கி.மீ தூர சாலைகளும் சேதமாகியுள்ளன என்று குறிப்பிட்ட அவர், சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்றார்.
Advertisement


