செங்கல்பட்டு: மறைமலைநகரில் புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஊரக வளர்ச்சி பயிற்சி நிலைய கட்டிடத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையிலும் ஊரக வளர்ச்சி, வருவாய், நகராட்சி மற்றும் பேரூராட்சி என அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள் உள்ளிட்ட அனைவருடன் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், 2022-2223 மற்றும் 2023-2024 ஆண்டுளுக்கான சாலைப்பணிகள், சாலை சந்திப்பு சிக்னல், தெரு விளக்குகள் (எல்ஈடி) பாதாள சாக்கடைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் எந்தளவிற்கு பணிகள் முடிவடைந்து மக்களிடம் சென்றடைந்துள்ளது. அதேபோல் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கிராமம் கிராமமாக சென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், எஸ்ஆர்ராஜா, எஸ்எஸ் பாலாஜி, நகர்மன்ற தலைவர்கள் எம்கேடி கார்த்திக் தண்டபாணி, தேன்மோழி நரேந்திரன், மற்றும் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.