கடலூர்: கடலூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். முன்னதாக ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்திப்பூ கோலமிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாவட்ட அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கணேசன், எம் எல் ஏக்கள் ஐயப்பன் ,சபா ராஜேந்திரன், ஆட்சியர் டாக்டர் அருண் தம்பு ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.