சென்னை: தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவர் ஆவது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்றபோது அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை வைத்து தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவை ஒன்றிய அரசு பாழாக்குகிறது என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.