சென்னை : ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறிய அவர், வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.