செங்கல்பட்டு: ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒவ்வொரு வீடாக வாக்காளர்களை சந்தித்து உறுப்பினராக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார். செங்கல்பட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தமிழ்நாடு உரிமை காக்க தொடங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பூத்தில் உள்ள வாக்குச்சாவடி முகவர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட், தேர்தல் பணி உறுப்பினர், இளைஞர் அணி நிர்வாகி, மகளிர் அணி நிர்வாகி என மொத்தம் ஐந்து பேர் ஒவ்வொரு வீடாக சென்று தமிழகத்தின் நிலையும், ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் நீட் பிரச்னை, 100 நாள் வேலை பிரச்னை, கல்வி நிதி தமிழகத்திற்கு தர மறுப்பது, ஜிஎஸ்டி நிதியில் தமிழகத்திற்கு போதிய பணம் ஒதுக்காதது உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து எடுத்து சொல்லியும் ஒன்றிய அரசிடம் முதல்வர் போராடி நிதியுதவி பெறுவது குறித்து எடுத்து சொல்ல உள்ளனர்.இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ். நரேந்திரன், மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், செங்கல்பட்டு நகர மன்ற துணைத் தலைவர் அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒவ்வொரு வீடாக வாக்காளர்களை சந்தித்து உறுப்பினராக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
0