சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி கடந்த வாரம் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை
0