Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வதற்காக அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை : சென்னை, பிராட்வே, பிரகாசம் தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (6.2.2025) துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-5, வார்டு-57, ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பிரகாசம் தெருவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-5, வார்டு-56, ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் கட்டப்பட்டு வரும் புதிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது மேயர் திருமதி.ஆர்.பிரியா ராஜன் அவர்கள், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா, இ.ஆ.ப., அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர். சு.பிரபாகர், இ.ஆ.ப., அவர்கள், சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் குழுத்தலைவர் திரு.ஸ்ரீராமலு, தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் திரு.இளம்பருதி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.கீதா, மண்டல அலுவலர் திருமதி.பரிதா பானு, மாமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.இசட்.ஆசாத், திரு.பரிமளம், திரு.தாஹா நவீன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.