சென்னை : அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது பற்றி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.