திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடத்தை கடந்த டிசம்பர் 3ம்தேதி அமைச்சர் பொன்முடி பார்வையிட சென்றபோது சிலர் அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது சேற்றை அள்ளி வீசினர்.
இதுதொடர்பாக இருவேல்பட்டு கிராமத்தை ராமர் (எ) ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சேற்றை வீசிய பாஜகவை சேர்ந்த விஜயராணியை போலீசார் கைது செய்தனர்.