வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக தலையில் ஈட்டி பாய்ந்து மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த பத்தாம் மாணவன் கிஷோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.