சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை வழித்தடம் 3-ல் 2023ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அன்று அயனாவரம் நிலையத்திலிருந்து ஓட்டேரி நிலையத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. 925 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஓட்டேரி வந்தடைந்தது: மெட்ரோ நிறுவனம் தகவல்
106